மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே முழுமையாக வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.
ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான முதல் டி20 போட்டி ஜமைக்காவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் முதலில் விளையாடியது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ராஸ்டன் சேஸ் அதிகபட்சமாக 32 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, கேப்டன் சாய் ஹோப் 39 பந்துகளில் 55 ரன்களும் (4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), ஷிம்ரன் ஹெட்மேயர் 19 பந்துகளில் 38 ரன்களும் (2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள்) எடுத்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் பென் துவார்ஷுயிஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். சீன் அப்பாட், கூப்பர் கன்னோலி, நாதன் எல்லிஸ் மற்றும் மிட்செல் ஓவன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
அறிமுகப் போட்டியில் அசத்தல்
190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் இலக்கை எட்டி, மேற்கிந்தியத் தீவுகளை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஆஸ்திரேலிய அணியில் அதிரடியாக விளையாடிய கேமரூன் கிரீன் 26 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அறிமுக வீரராக களமிறங்கிய மிட்செல் ஓவன் 27 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 6 சிக்ஸர்கள் அடங்கும். கேப்டன் மிட்செல் மார்ஷ் 24 ரன்கள் எடுத்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேசன் ஹோல்டர், அல்சாரி ஜோசப் மற்றும் குடகேஷ் மோட்டி தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். அகீல் ஹொசைன் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக களமிறங்கி 50 ரன்கள் மற்றும் ஒரு விக்கெட் வீழ்த்திய மிட்செல் ஓவன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
Summary
Australia won the first T20I against West Indies by 3 wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து மிட்செல் மார்ஷ் விலகல்!

சூா்யவன்ஷி அதிரடி; முன்னேறியது ராஜஸ்தான்
ரியான் பராக் அதிரடி வீண்!வெற்றியுடன் மீண்டது டெல்லி!

ஸ்டாய்னிஸ், பிரப்சிம்ரன் அரைசதம் விளாசல்; ராஜஸ்தானுக்கு 223 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



