காயமடைந்தாலும் ரிஷப் பந்த் பேட்டிங் செய்வார்..! - பிசிசிஐ

காயமடைந்தாலும் ரிஷப் பந்த் பேட்டிங் செய்வார் என பிசிசிஐ தெரிவித்துள்ளதைப் பற்றி...
ரிஷப் பந்த்.
ரிஷப் பந்த்.
Published on
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலிருந்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் காலில் காயம் ஏற்பட்டாலும் பேட்டிங் செய்வார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிவரும் ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியின் நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராபோர்டு மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் முதல்நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் குவித்திருந்தது.

இந்திய வீரர் ரிஷப் பந்த் 34 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்தபோது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்து அவரின் வலது காலில் நேரடியாகத் தாக்கியது. வலியில் துடித்த ரிஷப் பந்த் ’ரிட்டையா்டு ஹா்ட்’ முறையில் வெளியேறிய நிலையில், அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

காலில் எலும்பு முறிவால் அவதிப்படும் ரிஷப் பந்த், 6 வாரங்கள் வரை ஓய்வெடுக்கவுள்ளதாகவும், அவருக்குப் பதிலாக மாற்றுவீரராக இந்திய இளம் விக்கெட் கீப்பர் இஷன் கிஷானுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என பிசிசிஐ-யின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

இந்த நிலையில், போட்டியின் 2-வது நாளில் ரிஷப் பந்த், அணியில் இணைந்து பேட்டிங் செய்வார், ஆனால், விக்கெட் கீப்பிங் செய்யமாட்டார். அவருக்குப் பதிலாக துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பிங்கை செய்வார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தத் தொடரில் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி பின்னிலையில் உள்ளது. ஏற்கனவே, வேகப்பந்து வீச்சாளர்கள் ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், ஆல்ரவுண்டர் நிதீஷ்குமார் உள்ளிட்டோரும் காயம் காரணமாக விலகியுள்ளதால், இந்திய அணிக்கு இது மேலும் பின்னடைவாக அமைந்துள்ளது.

ரிஷப் பந்த்துக்கு பதிலாக கடந்த போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்த துருவ் ஜுரேல் மாற்று வீரர் களமிறக்கப்பட்டுள்ளார். ஐசிசி விதிகளின்படி அவரால் பேட்டிங் செய்ய முடியாது, பீல்டிங் மட்டுமே செய்ய முடியும்.

Summary

Rishabh Pant out of England series with fractured toe

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com