
ஐசிசி டி20 தரவரிசையில் அபிஷேக் சர்மா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். டி20 தரவரிசையில் நான்காவது இந்தியராக இந்த மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார்.
பஞ்சாபில் அமிர்தசரஸைச் சேர்ந்த அபிஷேக் சர்மா (24 வயது) இந்திய டி20 அணியில் 2024இல் அறிமுகமானார்.
இதுவரை இந்திய அணிக்காக 17 போட்டிகளில் 535 ரன்கள் எடுத்துள்ளார்.
இவரது பேட்டிங் சராசரி 33.43ஆக இருக்க, ஸ்டிரைக் ரேட் 193.84ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக கடந்த பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடினார்.
பின்னர், ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடினார். பிறகு, எப்படி முதலிடம் பிடித்தார் தெரியுமா? டிராவிஸ் ஹெட் புள்ளிகள் குறைந்ததால் அபிஷேக் சர்மா முதலிடம் பிடித்துள்ளார்.
ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை
1. அபிஷேக் சர்மா - 829 புள்ளிகள் (இந்தியா)
2. டிராவிஸ் ஹெட் - 814 புள்ளிகள் (ஆஸி.)
3. திலக் வர்மா - 804 புள்ளிகள் (இந்தியா)
4. பிலிப் சால்ட் - 791 புள்ளிகள் (இங்கிலாந்து)
5. ஜாஸ் பட்லர் - 772 புள்ளிகள் (இங்கிலாந்து)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.