மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஈ சாலா கப் நமது..! ஆர்சிபிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

விராட் கோலிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளதைப் பற்றி..

News image

ஆர்சிபி அணியினர்..

Updated On :3 ஜூன் 2025, 6:34 pm

ஐபிஎல்லில் கோப்பையை வென்ற ஆர்சிபி மற்றும் விராட் கோலிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் மோதிய நிலையில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் கோப்பையை வென்று அசத்தியுள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்துப் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “ஆர்சிபி அணிக்கு வாழ்த்துகள்! ஆச்சரியங்கள் நிறைந்த சீசனின் பரபரப்பான முடிவு. விராட் கோலியின் நீண்டகால கனவு தற்போது நனைவாயிருக்கிறது. இன்றைய இரவுக்கான கிரீடம் உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

சென்னை அணி அடுத்த சீசனில் சிறப்பான கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்ப்போம்” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.