பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

டபிள்யூடிசி இறுதிப் போட்டிக்கான பயிற்சியில் ஆஸி. வீரர்கள்!

ஆஸ்திரேலிய வீரர்கள் டபிள்யூடிசி இறுதிப் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

News image
பந்துவீச்சு பயிற்சியில் மிட்செல் ஸ்டார்க். - படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா
Updated On :5 ஜூன் 2025, 9:07 am

DIN

ஆஸ்திரேலிய வீரர்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யூடிசி) இறுதிப் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

டபிள்யூடிசி இறுதிப் போட்டி ஜூன். 11-15ஆம் தேதிகளில் லண்டனில் உள்ள லார்ட்ஸ் திடலில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் ஆஸி.- தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன் (2023) ஆஸ்திரேலியா கோப்பையை தக்க வைக்கும் நோக்கில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஐபிஎல் போட்டிகள் ஒருவாரம் ஒத்திவைக்கப்பட்டதால் தங்களது சொந்த நாட்டுக்குச் சென்ற ஆஸி. வீரர்கள் டபிள்யூடிசிக்கான பயிற்சிக்கு செல்லாமல் இந்தியாவுக்கு விளையாட வந்தார்கள்.

ஸ்டார்க், மார்கோ யான்சென் போன்ற வீரர்கள் ஐபிஎல் கடைசி கட்டத்தில் விளையாடாமல் சென்றார்கள்.

ஹேசில்வுட், கம்மின்ஸ், இங்கிலிஷ் ஆகியோர் தங்களது கடைசி போட்டி வரை விளையாடினார்கள்.

இந்நிலையில், அனைவரும் தங்களது சொந்த நாட்டுக்குச் சென்று அணியாக இணைந்து பயிற்சியைத் தொடங்கியுள்ளார்கள்.

ஆஸி. அணி

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டாஸ், மாட் குஹ்னெமன், மார்னஸ் லபுசேன், நாதன் லியோன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், பியூ வெப்ஸ்டர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.