

பிபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ச்சியாக அவமதிக்கப்படுவதாக அந்நாட்டு ரசிகர்களிடம் இருந்து புகார்கள் எழுந்துள்ளன.
ஆஸ்திரேலியாவில் பிபிஎல் எனும் பிக் பேஷ் டி20 லீக்கின் 15ஆவது சீசன் போட்டிகளில் நடைபெற்று வருகின்றன.
இந்தப் போட்டிகளில் பாகிஸ்தானைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் விளையாடி வருகிறார்கள்.
ஷாஷீன் ஷா காயம் காரணமாகவும், ஷதாப் கான் இலங்கை தொடரில் விளையாடவும் வெளியேறினார்கள்.
பாபர் அசாம் சிட்னி சிக்ஸர் அணியிலும் முகமது ரிஸ்வான் மெல்பர்ன் ரெனிகேட்ஸ் அணியிலும் விளையாடி வருகிறார்கள்.
இந்தத் தொடரின் 33-ஆவது போட்டியில் மெல்பர்ன் ரெனிகேட்ஸ் அணியின் முகமது ரிஸ்வான் 23 பந்தில் 26 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிடையர்ட் ஹர்ட் எனும் முறையில் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதேபோல் நேற்றைய சிட்னி சிக்ஸர் அணியின் பாபர் அசாம் பேட்டிங்கின் போது 11ஆவது ஓவரின் கடைசி பந்தில் 1 ரன் எடுக்கும் வாய்ப்பும் இருந்தும் ஸ்டீவ் ஸ்மித் அதைப் புறக்கணித்தார்.
அடுத்த ஓவரில் ஸ்மித் 32 ரன்கள் எடுத்து அசத்தினாலும் பாபர் அசாமுக்கு அது அவமானமாகப் பார்க்கப்பட்டது.
13-ஆவது ஓவரின் முதல் பந்திலேயே அவர் ஆட்டமிழந்து வெளியேறும்போது எல்லைக் கோட்டில் இருக்கும் கயிறை பேட்டினால் அடித்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
ஸ்டிரைக் ரேட் குறைவாக விளையாடுவதால் இப்படி நடப்பதாக ஆஸி ரசிகர்கள் கூற, பாகிஸ்தான் நாட்டு ரசிகர்களோ தங்களது நாட்டு வீரர்கள் அவமானப்படுத்தப்படுவதாகக் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.