தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர்களுக்கு அறிவுரை வழங்கிய இங்கிலாந்து வீரர்!

இங்கிலாந்தின் முன்னாள் வீரர் தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர்களுக்கு அறிவுரை வழங்கியது குறித்து...
Stuart Broad to guide South Africa on how to conquer WTC test
நடுவில் ஸ்டூவர்ட் பிராட். இருபுறமும் தெ.ஆ.வீரர்கள். படம்: ஐசிசி
Published on
Updated on
1 min read

இங்கிலாந்தின் முன்னாள் வீரர் தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர்களுக்கு அறிவுரை வழங்கியது உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும் தென்னாபிரிக்காவும் நாளை (ஜூன் 11) லண்டனில் மோதுகிறது.

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்த அதன் பரம எதிரியான இங்கிலாந்தின் உதவியை தெ.ஆ. அணி நாடியுள்ளது.

குறிப்பாக, லண்டனில் நடைபெறுவதால் ஆஸி.யை அதிகமாக விக்கெட்டுகள் எடுத்த ஸ்டீவர்ட் பிராட்டிடம் உதவியை நாடியுள்ளார்கள்.

சமீபத்தில் தெ.ஆ. அணிக்கு பயிற்சியாளராக பிராட்டை அணுகியபோது அவர் அதனை மறுத்துவிட்டார். மாறாக, இறுதிப் போட்டிக்கு முன்பாக சில அறிவுரைகளை மட்டும் வழங்குவதாக ஒப்புக்கொண்டதாக பேட்டி அளித்திருந்தார்.

ஸ்டீவர்ட் பிராட் சொன்னதுபோலவே, போட்டிக்கு முன்பாக தெ.ஆ. பந்துவீச்சாளர்களிடம் நீண்டநேரம் உரையாடினார்.

குறிப்பாக, எப்படி பந்துவீச வேண்டும்? எங்கு ஃபீல்டிங்கை நிறுத்த வேண்டும் எனக் கூறிவேன் என அவர் முன்பே பேட்டியில் தெரிவித்திருந்தார்.

முதன்முதலாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள தெ.அணி அதனை வெல்லும் முனைப்பில் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com