இங்கிலாந்து லயன்ஸில் விளையாடிய 19 வயது வீரருக்கு தேசிய அணியில் இடம்!

இங்கிலாந்து லயன்ஸில் விளையாடிய 19 வயது வீரருக்கு தேசிய அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளதைப் பற்றி...
Teenage fast bowler Eddie
எட்டி ஜாக்.
Published on
Updated on
1 min read

இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய 19 வயது இளம் வீரருக்கு தேசிய அணியில் இணைய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் ஜூன் 20 ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கு முன்னதாக, இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் 2 அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் தொடரில் விளையாடின. இவ்விரு போட்டிகளும் டிராவில் முடிந்தன.

இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய லயன்ஸ் வீரர் எட்டி ஜாக்கிற்கு தேசிய அணியினருடன் இணையும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 19 வயதான 6 அடி 4 அங்குலம் உயரம் கொண்டவரான எட்டி ஜாக், ஹாம்ஷையர் அணி வேகப்பந்து வீச்சாளராவார். இவர் கே.எல்.ராகுல், துருவ் ஜூரேல், நிதீஷ்குமாரின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.

இவரின் பந்துவீச்சு ஃபிலிண்டாப், மார்க் வுட், கிரேமி ஸ்வான் ஆகியோரை கவர்ந்துவிட்டதாக தி டைம்ஸ் லண்டன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

கவுன்டி சாம்பியன்ஸிப்பில் விளையாட ஜாக், இந்தியாவுக்கு எதிரான 2 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற இங்கிலாந்து 19 வயதுக்குள்பட்டோருக்கான அணியிலும் விளையாடியுள்ளார். மேலும், ஜிம்பாப்வேக்கு எதிரான பயிற்சி ஆட்டத்திலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

முதல் டெஸ்ட் போட்டியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகியுள்ளதாலும், இந்தத் தொடர் முழுவதும் மார்க் வுட் விளையாடாததாலும், அதைத் தொடர்ந்து கஸ் அகிட்சனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் ஜாக்கிற்கு அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com