நேற்று ஓய்வு.. இன்று நியூயார்க் அணி கேப்டன்..! பூரனின் புதிய பரிமாணம்!

நியூயார்க் அணியின் கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமியக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
நிக்கோலஸ் பூரன்..
நிக்கோலஸ் பூரன்..
Published on
Updated on
1 min read

சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற அடுத்த நாளே நியூயார்க் அணியின் புதிய கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான நிக்கோலஸ் பூரன், தனது 29 வயதிலேயே அனைத்துவிதமான சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இந்த திடீர் முடிவுக்கான காரணங்கள் குறித்து பூரன் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் தொடருக்கான நியூயார்க் அணியின் புதிய கேப்டனாக பூரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான ரிலையன்ஸ் நிறுவனத்தின் மற்றொரு அணியாக இந்த நியூயார்க் அணி இருக்கிறது.

ஐபிஎல்லில் லக்னௌ அணிக்கு விளையாடிவரும் நிக்கோலஸ் பூரன், லீக் போட்டிகளில் மிகவும் ஆபத்தான வீரராக கருதப்படுகிறார். இவர் இந்தாண்டு ஐபிஎல் தொடரிலேயே 40 சிக்ஸர்கள் விளாசியிருந்தார். மேலும், சிபிஎல், எம்எல்சி தொடர்களிலும் விளையாடி வருகிறார்.

2023 ஆம் ஆண்டில் எம்எல்சி தொடரில் அதிக ரன்களை(388) குவித்திருந்தார் பூரன். நிகழாண்டுக்கான தொடர் வருகிற வியாழக்கிழமை தொடங்கவிருக்கிறது. எம்ஐ நியூயார்க் அணியில் குயிண்டன் டிக்காக், பொல்லார்ட், ரஷீத்கான் என நட்சத்திர பட்டாளமே குவிந்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அதிக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனையுடன் 2275 ரன்கள் குவித்துள்ளார். மேலும், 61 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1983 ரன்கள் குவித்திருக்கிறார். ஆனால், அவர் ஒரு டெஸ்ட் போட்டியில்கூட விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com