ஏபிடி வில்லியர்ஸ் தனது குழந்தைகளுடன் மார்னஸ் லபுஷேனிடம் கையெழுத்து வாங்கிய விடியோ வைரலாகியது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியைப் பார்க்க பல முன்னாள் கிரிக்கெட்டர்களும் வந்துள்ளார்கள். கேன் வில்லியம்சனும் போட்டியை பார்த்து வருகிறார்.
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் இந்தப் போட்டிக்கான வர்ணனையாளராக லண்டன் சென்றுள்ளார். இவருடன் அவரது குழந்தைகளும் போட்டியைப் பார்க்கச் சென்றுள்ளனர்.
ஏபிடி தனது குழந்தைகளுடன் சேர்ந்து வரிசையில் நின்று ஆஸி. வீரர் மார்னஸ் லபுஷேனிடம் ஜெர்ஸியில் கையெழுத்து வாங்கியது அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
இந்த விடியோவைப் பகிரும் ரசிகர்கள், “இதுதான் ஏபிடியின் பெருந்தன்மை” எனப் புகழ்ந்து வருகிறார்கள்.
இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மாரனஸ் லபுஷேன் தற்போது முதல்முறையாக தொடக்க வீரராக களமிறங்கியுள்ளார்.
டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் 2ஆம் நாளான இன்று தென்னாப்பிரிக்க அணி விக்கெட் எதுவும் விழாமல் நன்றாக விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம் கையெழுத்து! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!

இரண்டு குழந்தைகளுடன் பெண் மறியல்

தாமரையுடன் இலையும் சேர்ந்து மலரும்: பியூஸ் கோயல்

முதல்முறையாக ஜோடி சேரும் சல்மான் கான் - நயன்தாரா!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


