டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்க வீரரின் சிறந்த இன்னிங்ஸ்; மார்க்ரமுக்கு பீட்டர்சன் பாராட்டு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு உதவிய அய்டன் மார்க்ரமை கெவின் பீட்டர்சன் பாராட்டியுள்ளார்.
South Africa's Aiden Markram celebrates after scoring a century on day three of the World Test Championship final
அய்டன் மார்க்ரம்படம் | AP
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு உதவிய அய்டன் மார்க்ரமை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் பாராட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் திடலில் நடைபெற்று வந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நேற்றுடன் (ஜூன் 14) நிறைவடைந்தது.

இந்தப் போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி, ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஐசிசி கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணியின் 27 ஆண்டுகால காத்திருப்பும் முடிவுக்கு வந்தது.

மார்க்ரமுக்கு பீட்டர்சன் பாராட்டு

282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, மார்க்ரமின் அசத்தலான சத்தினால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. மார்க்ரம் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா இடையேயான பார்ட்னர்ஷிப் அணியின் வெற்றிக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்தது.

இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க வீரர் ஒருவர் அடித்த சிறப்பான சதம் என மார்க்ரமின் சதத்தினை குறிப்பிட்டு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மார்க்ரம் விளையாடியது டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க வீரர் ஒருவரின் மிகவும் சிறந்த இன்னிங்ஸ் என நினைக்கிறேன். மிகவும் முக்கியமான போட்டியில் மார்க்ரம் சதம் விளாசியிருக்கிறார். முதல் இன்னிங்ஸில் ரன்கள் எடுக்காமல் ஏமாற்றமடைந்த பிறகு, இரண்டவாது இன்னிங்ஸில் அற்புதமாக விளையாடியது மிகவும் சிறப்பான விஷயம். மிகுந்த அழுத்தத்துக்கு மத்தியில் அவர் சிறப்பாக விளையாடியுள்ளார் என்றார்.

இரண்டாவது இன்னிங்ஸில் மார்க்ரம் 207 பந்துகளில் 136 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com