ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான அட்டவணை இன்று (ஜூன் 16) வெளியிடப்பட்டுள்ளது.
ஐசிசியின் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படவுள்ளன.
இதையும் படிக்க: அம்மா நலம், மீண்டும் இந்திய அணியுடன் இணையும் கௌதம் கம்பீர்!
இந்த நிலையில், மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான அட்டவணை இன்று (ஜூன் 16) வெளியாகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
தொடரின் முதல் போட்டியில் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதவுள்ளன. அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெறும் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது. இந்த போட்டி கொழும்புவில் நடைபெறுகிறது.
முதல் அரையிறுதிப் போட்டி அக்டோபர் 29 ஆம் தேதி குவாஹாட்டியில் நடைபெறவுள்ளது. அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி முன்னேறும் பட்சத்தில், போட்டியானது கொழும்புவில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டி அக்டோபர் 30 ஆம் தேதி பெங்களூரு அல்லது கொழும்புவில் நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டி நவம்பர் 2 ஆம் தேதி பெங்களூரு அல்லது கொழும்புவில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணிக்கான போட்டி விவரம்
செப்டம்பர் 30 - இந்தியா - இலங்கை, பெங்களூரு
அக்டோபர் 5 - இந்தியா - பாகிஸ்தான், கொழும்பு
அக்டோபர் 9 - இந்தியா - தென்னாப்பிரிக்கா, விசாகப்பட்டினம்
அக்டோபர் 12 - இந்தியா - ஆஸ்திரேலியா, விசாகப்பட்டினம்
அக்டோபர் 19 - இந்தியா - இங்கிலாந்து, இந்தூர்
அக்டோபர் 23 - இந்தியா - நியூசிலாந்து, குவாஹாட்டி
அக்டோபர் 26 - இந்தியா - வங்கதேசம், பெங்களூரு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.