விளையாட்டை விட விராட் கோலி உயர்ந்தவரில்லை: அஸ்வின்

இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட்டுக்கு முன்பாக விராட் கோலி குறித்து அஸ்வின் பேசியது...
virat kohli
விராட் கோலிஏபி
Published on
Updated on
1 min read

விராட் கோலி விளையாட்டை விட பெரியவரில்லை என இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட்டுக்கு முன்பாக அஸ்வின் பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது.

விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பிஜிடி தொடரில் மோசமாக விளையாடியதே இதற்குக் காரணமாக அமைந்தது.

விராட் கோலி ரசிகர்கள், “டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றியவர். அவர் இல்லாமல் இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் அழிந்துவிடும். அவர் மீண்டும் வந்தால்தான் இந்தியாவை காப்பாற்ற முடியும்” எனக் கூறினார்கள்.

இந்நிலையில், ஆங்கில ஊடகமான ரெவ்ஸ்போர்ட்ஸில் அஸ்வின் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

விளையாட்டை விட விராட் கோலி உயர்ந்தவரில்லை

இதற்கு முன்பாக விளையாடியவர்களும் சரி, இனிமேல் விளையாடுபவர்களும் சரி யாருமே விளையாட்டை விட உயர்ந்தவர்கள் கிடையாது. விளையாட்டு மட்டுமே பெரியது.

யாருமே தானாக வந்து விளையாட்டுக்கு நன்மை செய்துவிட்டு போய்விட முடியாது. விளையாட்டுதான் அவர்களுக்கு நன்மையோ தீமையோ செய்யும்.

எனக்கு விராட் கோலியை பிடிக்கும். அவர் வந்து விளையாடி விட்டுச் சென்றார். போட்டியை நல்ல இடத்தில் விட்டுச் சென்றுள்ளார். தற்போது, அதை யாராவது முன்னோக்கி எடுத்துச் செல்வார்கள்.

ஷுப்மன் கில், ரிஷப் பந்த், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல் இவர்களின் ஆட்டத்தைக் காண ஆவலாக இருக்கிறேன். சச்சின், கோலி இவர்களின் ஆற்றலை இவர்கள் மறுபதிலீடு செய்வார்களா எனப் பார்க்க வேண்டும். இது ஒட்டுமொத்த அணியின் பொறுப்பும்தான் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com