மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சதம் விளாசிய ரிஷப் பந்த்; டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன்கள் குவிப்பு!

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 3000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

News image
ரிஷப் பந்த்- படம் | AP
Updated On :21 ஜூன் 2025, 12:16 pm

DIN

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 3000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் திடலில் நேற்று (ஜூன் 20) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.

ரிஷப் பந்த் சதம்; டெஸ்ட்டில் 3000+ ரன்கள்

முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 359 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் 42 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்களும் எடுத்தனர்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் கேப்டன் ஷுப்மன் கில் 127 ரன்களுடனும், துணைக் கேப்டன் ரிஷப் பந்த் 65 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், இன்று (ஜூன் 21) இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. தொடக்கம் முதலே ஷுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் விளாசி அசத்தினர். ஷுப்மன் கில் 147 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் 178 பந்துகளில் 134 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 12 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.

முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் குவித்ததன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பந்த் 3000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

இதுவரை இந்திய அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரிஷப் பந்த், 3082 ரன்கள் குவித்துள்ளார். அதில் 7 சதங்கள் மற்றும் 15 அரைசதங்கள் அடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.