
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் விளாசி ரிஷப் பந்த் சாதனை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 465 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி இங்கிலாந்தைக் காட்டிலும் 6 ரன்கள் முன்னிலை பெற்றது.
ரிஷப் பந்த் சாதனை
6 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி, போட்டியின் நான்காம் நாளான இன்று (ஜூன் 23) சிறப்பாக விளையாடி வருகிறது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்த் இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் 202 பந்துகளில் சதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து, அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த்தும் சதம் விளாசி அசத்தினார். அவர் 130 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.
அதிரடியாக விளையாடிய அவர் 140 பந்துகளில் 118 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 15 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
அதிரடியாக விளையாடி முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் விளாசி அசத்தியுள்ளார் ரிஷப் பந்த். இதன் மூலம், இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டி ஒன்றின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய முதல் ஆசிய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். டெஸ்ட் போட்டி ஒன்றில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் விளாசிய 7-வது இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த், முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.