
ஆஸி. இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் விராட் கோலியை தனது முன்மாதிரி எனக் குறிப்பிட்டுள்ளார்.
பார்டர் கவாஸ்கர் தொடரில் சாம் கான்ஸ்டாஸ் அறிமுகமானார். இந்தியாவின் நட்சத்திர வீரர் பும்ரா ஓவரில் அதிரடியாக ஆடி உலக கிரிக்கெட்டில் புகழ்பெற்றார்.
முதல் இன்னிங்ஸில் 60, இரண்டாவது இன்ன்ங்ஸில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இரண்டாவது டெஸ்ட்டில் 23,22 என ஆட்டமிழந்தார்.
தற்போது, 3-ஆவது டெஸ்ட்டில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் களமிறங்கவிருக்கிறார். நாளை இந்தத் தொடர் தொடங்குகிறது.
விராட் கோலி சாம் கான்ஸ்டாஸை மோதியதால் 20 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர், சாம் கான்ஸ்டாஸ் குடும்பத்தினரை கோலி சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய நேர்காணலில் சாம் கான்ஸ்டாஸ் கூறியதாவது:
ஏபிடி வில்லியர்ஸ் - அவர் அதிரடியாக ஆடுவது பிடிக்கும். 360 டிகிரியிலும் அடித்து ஆட்டத்தை எடுத்துச் செல்வார்.
ஸ்டீவ் ஸ்மித் - என்னைப் பொறுத்தவரை ஸ்மித் உலகத்திலேயே தலைசிறந்த வீரர். அவருடன் விளையாடுவது மிகப்பெரிய கௌரவம்.
விராட் கோலி - கோலியின் மணிக்கட்டு அபாரமானது. வலதுபுறம் அவர் ஆடும் விதம் பிடிக்கும். அவர் விளையாடுவதைப் பார்த்து வளர்ந்திருக்கிறேன். மிகப்பெரிய முன்னுதாரணம்.
ஜாஸ் பட்லர் - அவரது சில விடியோக்களை பார்த்திருக்கிறேன். அதற்காக அவருக்கு நன்றி எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.