
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் 5-ஆம் நாளில் ஷர்துல் தாக்குர் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.
முதல் இன்னிங்ஸில் இந்தியா 471 சேர்க்க, இங்கிலாந்து 465 சேர்த்தது. இரண்டாம் இன்னிங்ஸில் இந்தியா 364 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வந்தது. அதிலும் பென் டக்கெட் சதம் அடித்து அசத்தலாக விளையாடி வந்தார்.
இரண்டாவது இன்னிங்ஸில் 54-ஆவது ஒவரில் 3,4-ஆவது பந்துகளில் ஷர்துல் தாக்குர் தனது மேஜிக்கை நிகழ்த்தினார்.
அதுவரை சிறப்பாக விளையாடி வந்த பென் டக்கெட் 149 ரன்களுக்கும் அடுத்து வந்த ஹாரி புரூக் பூஜ்ஜியத்திலும் ஆட்டமிழந்தார்கள்.
இங்கிலாந்து அணி 58.3 ஓவர்களில் 269/4 ரன்கள் எடுத்துள்ளது. மழை வந்ததால் தேநீர் இடைவேளை விடப்பட்டது.
இந்தியா வெற்றி பெற 6 விக்கெட்டுகள் தேவை. இங்கிலாந்து வெற்றிபெற 102 ரன்கள் தேவை. பென் ஸ்டோக்ஸ் - ஜோ ரூட் பார்ட்னர்ஷிப்தான் இரு அணிகளுக்குமே ஆட்டத்தை தீர்மானிப்பதாக இருக்கிறது.
ரூட் 14, ஸ்டோக்ஸ் 13 ரன்களும் எடுத்து களத்தில் இருக்கிறார்கள். பும்ரா எதாவது செய்து காப்பாற்றினால்தான் உண்டென ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.