தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

யு-19 முதல் ஒருநாள் போட்டி: 174 ரன்களுக்கு இங்கிலாந்து ஆட்டமிழப்பு!

இந்தியாவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

News image

படம் | பிசிசிஐ

Updated On :27 ஜூன் 2025, 1:31 pm

DIN

இந்தியாவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

19 வயதுக்குட்பட்டோருக்கான இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்து சென்றடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று (ஜூன் 27) நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 42.2 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் ராக்கி ஃபிலிண்டாஃப் 56 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஐசக் முகமது 42 ரன்களும், பென் டாக்கின்ஸ் 18 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் கனிஷ்க் சௌகான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஹெனில் படேல், அம்பிரிஷ் மற்றும் முகமது தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது.

summary

England were bowled out for 174 in the first match of the Under-19 ODI series against India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.