இரவு முழுவதும் தூங்கவில்லை; டி20 உலகக் கோப்பை நினைவுகளை பகிர்ந்த ரோஹித் சர்மா!

டி20 உலகக் கோப்பையை வென்று ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து அது தொடர்பான நினைவுகளை ரோஹித் சர்மா பகிர்ந்துள்ளார்.
indian captain rohit sharma
ரோஹித் சர்மா
Published on
Updated on
1 min read

டி20 உலகக் கோப்பையை வென்று ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து அது தொடர்பான நினைவுகளை ரோஹித் சர்மா பகிர்ந்துள்ளார்.

இந்திய அணி கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்று அசத்தியது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, 13 ஆண்டுகளாக தொடர்ந்த ஐசிசி கோப்பைக்கான தேடலை முடிவுக்கு கொண்டு வந்தது.

கடந்த ஆண்டு இதே நாளில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றது.

நினைவுகளைப் பகிர்ந்த ரோஹித் சர்மா

இந்திய அணி ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டிக்கு முந்தைய நாளின் இரவு முழுவதும் தூங்கவில்லை என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையை வென்ற நினைவுகள் குறித்து ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: 13 ஆண்டுகள் என்பது மிகவும் நீண்ட காலம். பலருக்கும் அவர்களது கிரிக்கெட் பயணம் 13 ஆண்டுகள் வரை கூட இருப்பதில்லை. அதனால், உலகக் கோப்பையை வெல்வதற்கான எனது காத்திருப்பு மிகவும் நீண்ட காலமாக இருந்தது. கடைசியாக கடந்த 2007 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றிருந்தேன்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப்போட்டிக்கு முதல் நாள் இரவு முழுவதும் தூங்கவில்லை. உலகக் கோப்பை குறித்து மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தேன். பதற்றமாக இருந்தேன். நான் பதற்றமாக இருப்பதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. இறுதிப்போட்டியன்று காலை 8.30 அல்லது 9 மணிக்கு போட்டிக்காக திடலுக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால், அன்று காலை 7 மணிக்கே புறப்பட தயாராகிவிட்டேன். என்னுடைய அறையிலிருந்து திடலை பார்க்க முடிந்தது.

நான் தொடர்ந்து திடலை பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் 2 மணி நேரத்தில் திடலில் இருப்பேன் என்பதை நினைத்துக் கொண்டேன். 4 மணி நேரத்தில் போட்டி நிறைவடைந்து முடிவு தெரிந்துவிடும். கோப்பையை வெல்வோம் அல்லது கோப்பையை இழந்துவிடுவோம் என மனதுக்குள் எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது என்றார்.

Summary

Rohit Sharma shared his memories of winning the T20 World Cup one year after the event.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com