
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி சாம்பியன்ஸ் டிராபிக்கான இறுதிப்போட்டியில் பங்கேற்பாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் வருகிற 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இரு அணிகளும் முன்னாள் சாம்பியன்கள் என்பதால் இந்தப் போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இரு அணி வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி தோள்பட்டை காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாடுவது சந்தேகத்திற்குரியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நியூசிலாந்து அணிக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: ஸ்லீவ்லெஸ் ஜெர்ஸிகள் அணிய தடை! ஐபிஎல் வீரர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் என்ன?
அவர் சரியான நேரத்தில் அணிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். 33 வயதான மேட் ஹென்றிக்கு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது அரையிறுதியில் இவரது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது.
சாம்பியன்ஸ் டிராபியில் மொத்தமாக 10 விக்கெட்டுகள் வீழ்த்தி முன்னணியில் இருக்கும் ஹென்றி இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மீண்டும் பிசிசிஐ ஒப்பந்தத்தில் ஷ்ரேயஸ் ஐயர்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.