4 ஆண்டுகளில் 4-வது ஐசிசி இறுதிப்போட்டி! -ரோஹித்துக்கு சூர்யகுமார் யாதவ் வாழ்த்து!

4 ஆண்டுகளில் 4-வது ஐசிசி இறுதிப்போட்டிக்குச் சென்ற கேப்டன் ரோஹித்துக்கு சூர்யகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரோஹித்துடன் சூர்யகுமார்...
ரோஹித்துடன் சூர்யகுமார்...
Published on
Updated on
1 min read

4 ஆண்டுகளில் 4 ஐசிசி இறுதிப்போட்டிக்குச் சென்ற கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் சாம்பியன்கள் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 9-வது சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டி வருகிற மார்ச் 9 ஆம் தேதி துபையில் நடைபெறவுள்ளது.

முன்னதாக, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா, ரோஹித் சர்மாவின் தலைமைப் பண்பு சுவாரசியமற்றதாக இருக்கிறது என்றும் அவரது உடற்தகுதி குறித்து கிண்டல் செய்திருந்தார். இது கடுமையான விமர்சனங்களை எழுப்பியிருக்கிறது. இந்த நிலையில், ரோஹித் சர்மாவுக்கு பலரும் தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து இந்திய டி20 கேப்டன் சூரியகுமார் யாதவும் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு அவரின் சாதனைகளைச் சுட்டிக்காட்டி ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிக்க: நியூசி.வீரர் மேட் ஹென்றி காயம்: இறுதிப்போட்டியில் பங்கேற்பாரா?

இதுபற்றி சூர்யகுமார் யாதவ் பேசுகையில், “ஒரு கேப்டனாக 4 ஆண்டுகளில் 4 ஐசிசி தொடர்களில் இறுதிப்போட்டிக்கு இந்திய அணியை ரோஹித் அழைத்துச் சென்றுள்ளார். கேப்டன் ரோஹித் சர்மா கடந்த 15-20 ஆண்டுகளாக இந்திய அணிக்கு அதிக பங்களிப்பை அளித்திருக்கிறார். பல சாதனைகளைப் படைத்த அவர் கடந்தாண்டு உலகக்கோப்பையை வெல்லுவதற்கு முக்கியப் பங்காற்றினார்.

ஐபிஎல் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் அவர் விளையாடும் போது அவர் அருகில் இருந்து எவ்வளவு கடினமாக உழைக்கிறார் என்பதைப் பார்த்திருக்கிறேன். இறுதிப்போட்டியில் வெற்றிபெற அவருக்கு வாழ்த்துகள். நமது அணியினரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்” என்றார்.

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி 4 ஐசிசி தொடர்களில் இறுதிப்போட்டிக்குச் சென்றுள்ளது. 116 ஆண்டுகளில் முதல் கேப்டன் என்ற சாதனையையும் ரோஹித் சர்மா படைத்திருக்கிறார்.

இவரது தலைமையில் ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஸிப், சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட தொடர்களில் இறுதிப்போட்டிக்குச் சென்றுள்ளது. மேலும், டி20 உலகக் கோப்பையும் வென்றுள்ளது.

இதையும் படிக்க: ஸ்லீவ்லெஸ் ஜெர்ஸிகள் அணிய தடை! ஐபிஎல் வீரர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள் என்ன?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com