இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஐசிசி ஒருநாள் தரவரிசை: ரோஹித் சர்மா, ரச்சின் அதிரடி முன்னேற்றம்! கோலிக்கு சரிவு!

ஐசிசி ஒருநாள் தரவரிசை: ரோஹித் சர்மா, ரச்சின் அதிரடி முன்னேற்றம்..

News image
Updated On :12 மார்ச் 2025, 8:17 am

DIN

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அதிரடியாக முன்னேற்றம் பெற்றுள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமை வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த வாரத்துக்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியல் இன்று(மார்ச் 12) வெளியிடப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் இந்தப் பட்டியலில் முன்னேற்றம் பெற்றுள்ளனர்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடிய சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி 76 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 2 இடங்கள் முன்னேறி மீண்டும் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார். இறுதிப் போட்டியில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்த விராட் கோலி ஒரு இடம் சரிந்து 5-வது இடத்தில் உள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபியில் தொடர் நாயகன் விருது வென்ற நியூசிலாந்து அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா அதிரடியாக 14 இடங்கள் முன்னேறி 14 வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய இளம் வீரர் கில் முதலிடத்தில் தொடர்கிறார்.

ஐசிசி தரவரிசையில் முதல் 10 இடங்கள்

ஷுப்மன் கில் -784 புள்ளிகள்

பாபர் அசாம் - 770 புள்ளிகள்

ரோஹித் சர்மா -756 புள்ளிகள்

ஹென்ரிச் கிளாசன் -744 புள்ளிகள்

விராட் கோலி - 736 புள்ளிகள்

டேரில் மிட்செல் -721 புள்ளிகள்

ஹாரி டெக்டர் -713 புள்ளிகள்

ஸ்ரேயாஸ் ஐயர்-704 புள்ளிகள்

சரித் அசலங்கா -694 புள்ளிகள்

இப்ராஹிம் ஸ்த்ரான் - 676 புள்ளிகள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.