
நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடுவதற்கான பாகிஸ்தான் அணி நியூசிலாந்து சென்றடைந்தது.
பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் முதலில் தொடங்குகிறது. முதல் டி20 போட்டி மார்ச் 16 ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி நியூசிலாந்து சென்றடைந்தது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் அணி, சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து சீக்கிரமாக வெளியேறியது. அதன் பின், அந்த அணியையும், அணி வீரர்களையும் முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சித்தனர்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் சரியாக விளையாடாத நிலையில், வெள்ளைப் பந்து தொடர்களுக்காக நியூசிலாந்துக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சல்மான் அகா நியமிக்கப்பட்டுள்ளார். துணைக் கேப்டனாக ஷதாப் கான் நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டனாக முகமது ரிஸ்வான் தொடர்கிறார்.
இதையும் படிக்க: விரைவில் நியூசி. ஐசிசி கோப்பையை வெல்லும்: ரிக்கி பாண்டிங்
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட தவறிய நிலையில், நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி எவ்வாறு செயல்படப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.