
இந்திய ஆடவா் மற்றும் மகளிா் கிரிக்கெட் அணிகள், ஒருநாள், டி20 தொடா்கள் மற்றும் டெஸ்ட்டில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்கின்றன. அதற்கான அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
ஆடவா் அணி
இந்திய ஆடவா் அணி, நடப்பாண்டு அக்டோபா் - நவம்பரில் டி20 மற்றும் ஒருநாள் தொடா்களில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா செல்கிறது.
அப்போது இந்திய - ஆஸ்திரேலிய அணிகள், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளன. இதில் ஒருநாள் ஆட்டங்கள் பகலிரவாகவும், டி20 ஆட்டங்கள் இரவிலும் விளையாடப்படவுள்ளன.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, இந்தத் தொடா்களின் 8 ஆட்டங்களும் அந்த நாட்டிலுள்ள 8 மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களில் நடைபெறவுள்ளன. கடந்த ஆண்டு பாா்டா் - காவஸ்கா் கோப்பை டெஸ்ட் தொடருக்காக ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி, அதன் பிறகு நடப்பாண்டு அக்டோபா் - நவம்பரில் செல்லவிருக்கிறது.
தொடா் அட்டவணை
ஒருநாள்
முதல் ஆட்டம் அக்டோபா் 19 பொ்த்
2-ஆவது ஆட்டம் அக்டோபா் 23 அடிலெய்டு
3-ஆவது ஆட்டம் அக்டோபா் 25 சிட்னி
டி20
முதல் ஆட்டம் அக்டோபா் 29 கான்பெரா
2-ஆவது ஆட்டம் அக்டோபா் 31 மெல்போா்ன்
3-ஆவது ஆட்டம் நவம்பா் 2 ஹோபா்ட்
4-ஆவது ஆட்டம் நவம்பா் 6 கோல்டு கோஸ்ட்
5-ஆவது ஆட்டம் நவம்பா் 8 பிரிஸ்பேன்
மகளிா் அணி
இந்திய மகளிா் கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியா செல்லும் நிலையில், 3 ஃபாா்மட்டுகளிலுமே அந்நாட்டு மகளிா் அணியுடன் விளையாடவுள்ளது.
3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடா், அதே எண்ணிக்கையிலான ஆட்டங்கள் அடங்கிய ஒருநாள் தொடா், ஒரேயொரு டெஸ்ட் ஆகியவற்றில் இந்திய - ஆஸ்திரேலிய மகளிா் அணிகள் மோதவுள்ளன. இதில் டெஸ்ட் மட்டும் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.
இந்தியாவில் நடைபெறும் மகளிா் பிரீமியா் லீக் கிரிக்கெட் போட்டியை பிசிசிஐ 2026-இல் இருந்து ஜனவரிக்கு மாற்றுவதால், இந்தத் தொடா்களை பிப்ரவரி - மாா்ச் காலகட்டத்தில் அட்டவணையிட்டுள்ளதாக ஆஸ்திரேலிய வாரியம் தெரிவித்திருக்கிறது.
தொடா் அட்டவணை
டி20
முதல் ஆட்டம் பிப்ரவரி 15 சிட்னி
2-ஆவது ஆட்டம் பிப்ரவரி 19 கான்பெரா
3-ஆவது ஆட்டம் பிப்ரவரி 21 அடிலெய்டு
ஒருநாள்
முதல் ஆட்டம் பிப்ரவரி 24 பிரிஸ்பேன்
2-ஆவது ஆட்டம் பிப்ரவரி 27 ஹோபா்ட்
3-ஆவது ஆட்டம் மாா்ச் 1 மெல்போா்ன்
டெஸ்ட் : மாா்ச் 6 - 9 (பகலிரவு) பொ்த்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.