தோனியை விரும்பும் ரசிகர்கள் எல்லோரும் ’இயல்பாகச் சேர்ந்த கூட்டம்!’ என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைப் பற்றி நடைபெற்றதொரு விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தபோது, ஹர்பஜன் சிங் இந்த கருத்தை வெளிப்படுத்தினார்.
அவர் பேசியிருப்பதாவது: ”எந்தவொரு கிரிக்கெட் வீரருக்காவது உண்மைமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால், அது தோனி ஒருவருக்கே! மற்ற வீரர்களெல்லாம் பணம் கொடுத்தும் ரசிகர் பட்டாளத்தை திரட்டியுள்ளனர்” என்றார்.
மேற்கண்ட கருத்து பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இருந்தாலும், ஹர்பஜன் பொய் சொல்லவில்லை. அவரது பேச்சில் நியாயம் இருக்கிறதென்பதே தோனி ரசிகர்களின் கருத்தாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக கடந்த சில நாள்களுக்கு முன் விராட் கோலி அறிவித்த மறுநொடியிலிருந்தே, அவரைப் பற்றிய கருத்துகள், விடியோக்கள், படங்கள் சமூக வலைதளங்களை கடந்த சில நாள்களாக ஆக்கிரமித்திருந்தன. இந்த நிலையில், கோலியின் ரசிகர்களைக் குறிவைத்தே ஹர்பஜன் சிங் இப்படி பேசியிருக்கிறார் என்றும் சிலர் சொல்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிக வருமான வரி செலுத்துவதில் தோனி முதலிடம்!
இந்திய கிரிக்கெட் வீரர் 36 வயதில் திடீர் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!!

முந்தையப் போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாடியிருந்தால்... ஹர்பஜன் சிங் கூறுவதென்ன?

பாஜகவுக்கு தாவிய ஹர்பஜன் சிங்! வீட்டுச் சுவரில் துரோகி வாசகம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



