இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வெலிங்டனில் இன்று (நவம்பர் 1) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இங்கிலாந்து அணி முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் 222 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் மீண்டும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
டாப் ஆர்டர் பேட்டர்களான ஜேமி ஸ்மித் (5 ரன்கள்), பென் டக்கெட் (8 ரன்கள்), ஜோ ரூட் (2 ரன்கள்), ஹாரி ப்ரூக் (6 ரன்கள்), ஜேக்கோப் பெத்தேல் (11 ரன்கள்) எடுத்தனர். ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடிய பின்வரிசை ஆட்டக்காரர்கள் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
ஜோஸ் பட்லர் 38 ரன்களும், சாம் கரண் 17 ரன்களும் எடுத்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டான் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 62 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். பிரைடான் கார்ஸ் 36 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து தரப்பில் டிக்னர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ஜேக்கோப் டஃபி 3 விக்கெட்டுகளையும், ஸகாரி ஃபோல்க்ஸ் 2 விக்கெட்டுகளையும், மிட்செல் சாண்ட்னர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
42 ஆண்டுகளுக்குப் பிறகு...
223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 44.4 ஓவர்களில் இலக்கை எட்டி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
அந்த அணியில் ரச்சின் ரவீந்திரா 46 ரன்களும் (7 பவுண்டரிகள்) , டேரில் மிட்செல் 44 ரன்களும் (4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, டெவான் கான்வே 34 ரன்களும், கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 27 ரன்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் ஜேமி ஓவர்டான், சாம் கரண் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். பிரைடான் கார்ஸ் மற்றும் அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. கடந்த 42 ஆண்டுகளில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி முழுமையாகக் கைப்பற்றுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய டிக்னர் ஆட்ட நாயகனாகவும், தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட டேரில் மிட்செல் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Summary
New Zealand won the third ODI against England by 2 wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிளன் பிலிப்ஸ் சதம் விளாசல்; முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் குவித்த நியூசிலாந்து!

டி20 உலகக் கோப்பை: இலங்கைக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து!

நியூசி.க்கு எதிராக இங்கிலாந்து அபார வெற்றி; மீண்டும் எழுச்சி பெறுகிறதா பேஸ்பால் யுக்தி?

லார்ட்ஸ் டெஸ்ட்: ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய ராபின்சன்..! நியூசிலாந்து தடுமாற்றம்!
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



