ஆஷஸ் தொடருக்கான ஆஸி. அணி அறிவிப்பு! கேப்டனாக ஸ்மித்.. மீண்டும் மார்னஸ் லபுஷேனுக்கு வாய்ப்பு!

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
ஸ்டீவ் ஸ்மித் - மார்னஸ் லபுஷேன்.
ஸ்டீவ் ஸ்மித் - மார்னஸ் லபுஷேன்.
Published on
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் மார்ன்ஸ் லபுசேனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் வருகிற நவம். 21 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தத் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதான கேப்டன் பாட் கம்மின்ஸ் காயம் காரணமாக விளையாட நிலையில், முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான மார்னஸ் லபுஷேன் சுமாரான ஆட்டம் காரணமாக கரீபியனில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற டெஸ்ட் போட்டித் தொடரில் கலட்டிவிடப்பட்டார்.

அதன்பின்னர், உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 சதங்கள் விளாசினார். இதனால், மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் அவர் இடம்பெற்றுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரில் அறிமுகமான தொடக்க ஆட்டக்காரர் சாம் கான்ஸ்டாஸ் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக, ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு விளையாடும் 31 வயதான ஜேக் வெதரால்டுக்கு முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஷெஃபீல்ட் ஷீல்டு தொடரில் ஜேக் வெதரால்ட் 50.33 சராசரியுடன் 906 ரன்கள் குவித்திருந்தார்.

வேகப்பந்து வீச்சில் மும்மூர்த்திகளான மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசில்வுட், ஸ்காட் போலண்ட் மூவரும், அவர்களுடன் அறிமுக வீரர்களாக பிரெண்டன் டக்கெட், சீன் அப்பார்ட் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர். ஆல்-ரவுண்டர்களாக பியூ வெப்ஸ்டர், கேமரூன் கிரீன் இருவரும் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்

ஸ்டீவ் ஸ்மித்(கேப்டன்), சீன் அப்பார்ட், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டாக்கெட், கேமரூன் கிரீன், ஜோஸ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஸ் இங்லிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுசேன், நாதன் லயன், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்ட், பியூ வெப்ஸ்டர்.

ஸ்டீவ் ஸ்மித் - மார்னஸ் லபுஷேன்.
விராட் கோலிக்கான மிகச் சிறந்த பிறந்த நாள் பரிசு - அவர் மீதான நம்பிக்கையே!
Summary

Marnus Labuschagne returns to Australia's Ashes squad after missing West Indies series

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com