

தென்னாப்பிரிக்க வீரர் கேசவ் மகாராஜ் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த ஆர்வத்துடன் இருப்பதாகக் கூறியுள்ளார்.
இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகளில் விளையாடுகின்றன.
முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் வரும் நவ.14ஆம் தேதி தொடங்குகிறது.
15 ஆண்டுகளாக இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்லாமல் இருக்கும் தென்னாப்பிரிக்க அணி வெல்லும் முனைப்பில் இருக்கிறது.
இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும்
இது குறித்து அந்த அணியின் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் கேசவ் மகாராஜா பேசியதாவது:
இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த உண்மையான வேட்கையும் ஆசையும் இருக்கின்றன.
அநேகமாக இது ஒரு சவாலான சுற்றுப் பயணமாக இருக்குமென நினைக்கிறேன். தென்னாப்பிரிக்க அணிக்கு இது மிகப்பெரிய டெஸ்ட்டாக இருக்கும்.
நாங்கள் எவ்வளவு தூரம் முன்னேறி வந்திருக்கிறோம் என்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.
சுழல்பந்துக்கு சாதகமாக இருக்காது...
துணைக் கண்டத்தில் பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளோம். அதேபோல் இந்தியாவையும் வெல்ல வேண்டுமென மிகவும் மிகவும் விரும்புகிறோம்.
பாகிஸ்தானில் இருந்ததுபோல் இங்கு சுழல்பந்துக்கு சாதகமாக இருக்குமென நினைக்கவில்லை. போட்டி செல்ல செல்ல ஆடுகளம் சிதைவடையுமென நினைக்கிறேன்.
அநேகமாக, பாரம்பரியமான டெஸ்ட் ஆடுகளமாக இருக்குமென நினைக்கிறேன்.
மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் பார்க்கும்போது நல்ல ஆடுகளமாகத் தோன்றியது. ஏனெனில் 4,5 நாள்கள் ஆட்டம் சென்றது.
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இருந்து, டாஸ் எப்படி ஆனாலும் போராட கற்றுக்கொண்டோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.