டி20: சொந்த மண்ணில் இந்தியாவுக்கு மிகப்பெரிய தோல்வி!

டி20 கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் இந்தியாவின் மோசமான தோல்வி குறித்து...
India's Kuldeep Yadav and India's Ravi Bishnoi congratulates New Zealand players after New Zealand won fourth T20 cricket match against India.
தோல்விக்குப் பிறகு இந்திய அணியினர் உடன் நியூசி. அணியினர். படம்: ஏபி
Updated on
1 min read

டி20 கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு மிகப்பெரிய தோல்வி கிடைத்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 215/7 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய இந்திய அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்தப் போட்டியில் நியூசிலாந்தின் தொடக்க வீரர் டிம் செய்ஃபெர்ட் 62 ரன்கள் குவித்ததால், அவருக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.

சொந்த மண்ணில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தோல்வியாக இந்தப் போட்டி மாறியுள்ளது.

சொந்த மண்ணில் மிகப்பெரிய தோல்வி (ரன்கள் அடிப்படையில்)

51 ரன்கள் - தெ.ஆ. எதிராக (2025, முல்லான்பூர்)

50 ரன்கள் - நியூசி.க்கு எதிராக (2026, விசாகப்பட்டினம்)

49 ரன்கள் - தெ.ஆ. எதிராக (2022, இந்தூர்)

47 ரன்கள் - நியூசி.க்கு எதிராக (2016, நாக்பூர்)

40 ரன்கள் - நியூசி.க்கு எதிராக (2017, ராஜ்கோட்)

இருப்பினும் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3-1 என ஏற்கெனவே இந்திய அணி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

India has suffered its biggest defeat at home in T20 cricket.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com