

பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 211 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் இன்று (நவம்பர் 16) நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இலங்கை அணி முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய இலங்கை அணி 45.2 ஒவர்களில் 211 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சதீரா சமரவிக்கிரம 48 ரன்களும், கேப்டன் குஷல் மெண்டிஸ் 34 ரன்களும் எடுத்தனர். பவன் ரத்நாயகே 32 ரன்கள், கமில் மிஷாரா 29 ரன்கள், பதும் நிசங்கா 24 ரன்கள் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் முகமது வாசிம் 3 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ரௌஃப் மற்றும் ஃபைசல் அக்ரம் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஷகீன் அஃப்ரிடி மற்றும் ஃபாஹீம் அஷரஃப் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி ஏற்கனவே 2-0 என கைப்பற்றிவிட்ட நிலையில், இன்றையப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்பில் பாகிஸ்தான் அணி விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.