இந்தியா ஏ அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பாகிஸ்தான் ஏ!

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் ஆட்டத்தில் இந்தியா ஏ-வின் தோல்வி குறித்து...
India A and Pakistan A teams.
இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ அணியினர். படங்கள்: எக்ஸ் / ஏசியன் கிரிக்கெட் கவுன்சில்.
Published on
Updated on
1 min read

ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் ஆட்டத்தில் இந்தியா ஏ அணியை பாகிஸ்தான் ஷாகீன்ஸ் அணி வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் முதல் அணியாக பாகிஸ்தான் ஷாகீன்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியது.

கத்தாரில் நடைபெற்ற ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ் ஆட்டத்தில் பாகிஸ்தான் ஏ, இந்தியா ஏ அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் ஏ பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

பேட்டிங் செய்த இந்திய அணி 19 ஓவர்களில் 136 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி 45 ரன்கள் எடுத்தார்.

பாகிஸ்தான் சார்பில் ஷாகித் அசிஸ் 3 விக்கெட்டுகள், மாஜ் சதாகட், ஷான் மசூத் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அடுத்து விளையாடிய பாகிஸ்தான் ஷாகீன்ஸ் அணி 13.2 ஓவர்களில் 137/2 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக மாஜ் சதாகட் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அசத்தினார். பந்துவீச்சு, பேட்டிங் என அசத்திய இவர் ஆட்ட நாயகனாகவும் தேர்வானார்.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தா ஏ அணி முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ அணியினர் டாஸ் சுண்டும்போது கைகுலுக்காமல் சென்றதும் குறிப்பிடத்தக்கது.

Summary

An inexplicable batting collapse saw fancied India A lose to Pakistan Shaheens by eight wickets in the Asia Cup Rising Stars tournament here on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com