

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.
3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில், 2 வெற்றிகளுடன் அந்த அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது.
மழை காரணமாக இன்னிங்ஸுக்கு 34 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில், முதலில் மேற்கிந்தியத் தீவுகள் 34 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் சேர்த்தது. நியூஸிலாந்து 33.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழந்து 248 ரன்கள் எடுத்து வென்றது.
முன்னதாக டாஸ் வென்ற நியூஸிலாந்து, பந்துவீச்சை தேர்வு செய்தது. மேற்கிந்தியத் தீவுகள் பேட்டிங்கில் அதிகபட்சமாக, கேப்டன் ஷாய் ஹோப் 13 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 109 ரன்கள் விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூஸிலாந்து பெளலர்களில் நேதன் ஸ்மித் 4, கைல் ஜேமிசன் 3 விக்கெட் எடுத்தனர்.
அடுத்து, 248 ரன்களை நோக்கி விளையாடிய நியூஸிலாந்து அணியில், டெவன் கான்வே 13 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 90, ரச்சின் ரவீந்திரா 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு அடித்தளமிட்டனர்.
மேற்கிந்தியத் தீவுகள் பெüலிங்கில் மேத்யூ ஃபோர்டு, ஜஸ்டின் கிரீவ்ஸ் குறைந்த ரன்கள் கொடுத்து தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.