நூறாவது டெஸ்ட் போட்டியில் 100*.. சாதனை படைத்த முஷ்ஃபிகுர் ரஹிம்!

சர்வதேச டெஸ்ட்டில் தனது 100 வது போட்டியில் சதம் விளாசி வங்கதேச வீரர் முஷ்ஃபிகுர் ரஹிம் சாதனை படைத்துள்ளதைப் பற்றி...
சதமடித்த வங்கதேச வீரர் முஷ்ஃபிகுர் ரஹிமை வாழ்த்தும் அயர்லாந்து கேப்டன் ஆன்டி பால்பிர்னி.
சதமடித்த வங்கதேச வீரர் முஷ்ஃபிகுர் ரஹிமை வாழ்த்தும் அயர்லாந்து கேப்டன் ஆன்டி பால்பிர்னி.படம்: ஐசிசி
Published on
Updated on
1 min read

சர்வதேச டெஸ்ட்டில் தனது 100 வது போட்டியில் சதம் விளாசி வங்கதேச வீரர் முஷ்ஃபிகுர் ரஹிம் சாதனை படைத்துள்ளார்.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி டாக்கா கிரிக்கெட் திடலில் நேற்று(நவ.19) தொடங்கியது.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 476 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

முதல் நாள் ஆட்டம் முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 292 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியில் முஷ்ஃபிகுர் ரஹிம் 99 ரன்களுடனும், லிட்டன் தாஸ் 47 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

பின்னர், 2 ஆம் நாள் ஆட்டம் தொடங்கியதுமே ஒரு ரன்னை அடித்த முஷ்ஃபிகுர் ரஹிம், சதம் கடந்ததும் டாக்கா திடலில் இருந்த அனைவரும் கைதட்டி ஆரவாரப்படுத்தினர்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் 128 ரன்களும் (8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள்), முஷ்ஃபிகுர் ரஹிம் 106 ரன்களும், மொமினுல் 63 ரன்களும் குவித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்த நிலையில், 100 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி சதம் அடித்த வீரர்களின் சாதனை பட்டியலில் முஷ்ஃபிகுர் ரஹிமும் 11 வது வீரராக இணைந்தார். அதனைத் தொடர்ந்து நூறாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் வங்கதேச வீரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.

நூறாவது போட்டியில் சதமடித்தவர்கள்

  • 104 - கொலின் கௌட்ரே - 1968

  • 145 - ஜாவேத் மியான்டட் - 1989

  • 149 - கோர்டன் க்ரீனிட்ஜ் - 1990

  • 105 - அலெக் ஸ்டீவர்ட் - 2000

  • 184 - இன்சமாம்-உல்-ஹக் - 2005

  • 120 & 143* - ரிக்கி பாண்டிங் - 2006

  • 131 - கிரேம் ஸ்மித் - 2012

  • 134 - ஹாஷிம் ஆம்லா - 2017

  • 218 - ஜோ ரூட் - 2021

  • 200 - டேவிட் வார்னர் - 2022

  • 106 - முஷ்பிகுர் ரஹீம் - 2025*

சதமடித்த வங்கதேச வீரர் முஷ்ஃபிகுர் ரஹிமை வாழ்த்தும் அயர்லாந்து கேப்டன் ஆன்டி பால்பிர்னி.
ஆஷஸ் தொடரில் தோல்வியே காணாத கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்..! சாதனை தொடருமா?
Summary

Bangladesh's Mushfiqur Rahim becomes 11th batter to score hundred in his 100th Test

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com