மூன்றாம் நாளுக்கான டிக்கெட் வாங்கியவர்களிடம் மன்னிப்பு கேட்ட டிராவிஸ் ஹெட்!

இரண்டே நாளில் முடிந்த முதல் ஆஷஸ் போட்டி குறித்து டிராவிஸ் ஹெட் கூறியதாவது...
Australia's Travis Head acknowledges the applause as he leaves the ground after losing his wicket on day two of the first Ashes cricket test in Perth.
ஆட்டமிழந்து வெளியேறிய டிராவிஸ் ஹெட். படம்: ஏபி
Published on
Updated on
1 min read

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய ஆஷஸ் போட்டி இரண்டே நாளில் முடிவடைந்தது.

ஆஸ்திரேலிய அணியின் நடசத்திர வீரர் டிராவிஸ் ஹெட் இதற்காக மூன்றாம் நாளுக்கான டிக்கெட் வாங்கியவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

பெர்த்தில் தொடங்கிய இந்தப் போட்டியில் இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 172க்கு ஆல் அவுட்டாக, ஆஸி. அணி 132க்கு ஆல் அவுட்டானது.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணி 106க்கு 1-இல் இருந்து 132க்கு ஆல் அவுட்டானது.

அடுத்து விளையாடிய ஆஸி, அணி 28.2 ஓவர்களில் 205/2 ரன்கள் எடுத்து வென்றது.

இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 83 பந்துகளில் 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இது குறித்து அவர் பேசியதாவது:

மூன்றாம் நாளுக்கான டிக்கெட் வாங்கிய 60,000 மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இது நம்பமுடியாத வெற்றி. உணர்ச்சிகள் அதிகமாக இருக்கின்றன. நான் பங்களித்த விதம் நினைத்து சிறப்பாக உணர்கிறேன் என்றார்.

இரண்டாவது ஆஷஸ் டிச.4ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்னதாக நவ.29-இல் பிரைம் மினிஸ்டர் லெவன்ஸ் உடன் இங்கிலாந்து பயிற்சி ஆட்டத்தில் ஆடவிருக்கிறது.

Summary

Travis Head says ‘sorry’ to 60,000 people for hammering England and ending Ashes Test in two days.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com