

குவாஹாட்டி டெஸ்ட் 5 ஆம் நாள் மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியவுடன் இந்திய பேட்டர்கள் மேலும் இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான குவாஹாட்டி டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா 2-ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்கள் சோ்த்து செவ்வாய்க்கிழமை ‘டிக்ளோ்’ செய்தது.
இதன் மூலமாக, 549 ரன்கள் என்ற எட்ட முடியாத இலக்கை இந்தியாவுக்கு நிா்ணயித்தது தென்னாப்பிரிக்கா.
4 ஆம் நாள் இறுதியில் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி நாளில் 8 விக்கெட்டுகள் கொண்டு 522 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது.
இந்த நிலையில், டிரா செய்யும் முனைப்பில் 5 ஆம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி களமிறங்கிய நிலையில், குல்தீப் யாதவ், துருவ் ஜுரல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகி ஏமாற்றம் அளித்துள்ளனர்.
58 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து இந்திய பேட்டர்கள் தடுமாற்றம் அடைந்துள்ள நிலையில், ரவீந்திர ஜடேஜாவும், சாய் சுதர்ஷனும் களத்தில் உள்ளனர்.
அபாரமாக பந்துவீசி வரும் தென்னாப்பிரிக்காவின் சைமன் ஹார்மர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய பேட்டர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்.
இந்தத் தொடரில் பேட்டிங், பௌலிங் என எதிலுமே தென்னாப்பிரிக்காவுக்கு சவால் அளிக்க முடியாமல் சறுக்கியிருக்கும் இந்தியா, சொந்த மண்ணிலேயே 2-ஆவது டெஸ்ட் தொடரை முழுமையாக இழக்கும் அபாயத்தில் இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.