
இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிடமிருந்து ரூ.5 கோடி கேட்டு பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கும்பல் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், கொல்கத்தா அணி வீரருமான ரிங்கு சிங், இந்திய டி20 அணியில் மட்டும் விளையாடி வருகிறார்.
இவர் ஐபிஎல் தொடரில் 2023 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக ரூ.55 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு விளையாடி வந்தார். பின்னர், குஜராத்துக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
அதன் தொடர்ச்சியாக உலகப் பிரபலமான ரிங்கு, கடந்தாண்டு மெகா ஏலத்தில் கொல்கத்தா அணியால் ரூ.13 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். மேலும், இந்திய டி20 அணிக்கு ஆசியக் கோப்பையில் பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றி பெறவைத்திருந்தார்.
இவருக்கும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சமாஜவாதி எம்.பி. பிரியா சரோஜுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயிக்கப்பட்டது.
இந்த நிலையில், ரிங்கு சிங்குவை பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கும்பல் ரூ.5 கோடி கேட்டு கடந்த ஏப்ரல் மாதம் மிரட்டல் விடுத்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் முகமது தில்ஷாத், முகமது நவீத் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலால் கொல்லப்பட்ட தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக்கின் மகன் மகன் ஜீஷான் சித்திக்கிடமும் ரூ.10 கோடி கேட்டு மிரட்டல் விடுத்துள்ளது.
அவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, டிரினிடாட் மற்றும் டொபாகோவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நவீத் மற்றும் தில்ஷாத் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.