
இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது எழாவது டெஸ்ட் சதத்தினை நிறைவு செய்தார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியின் 50.1ஆவது ஓவரில் தனது 145-ஆவது பந்தில் 2 ரன்கள் எடுத்து அந்த சதத்தினை நிறைவு செய்தார்.
தில்லியில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
ஜெய்ஸ்வால் அறிமுகமானபிறகு அவர் மட்டுமே 7 சதங்கள் அடித்திருக்கும் வேளையில், மற்ற இந்திய தொடக்க வீரர்கள் 6 மட்டுமே அடித்துள்ளார்கள்.
டெஸ்ட்டில் 49.89 சராசரியை வைத்துள்ள ஜெய்ஸ்வால் மே.இ.தீ. அணிக்கு எதிராக மட்டுமே கிட்டதட்ட 100 சராசரி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
23 வயதாகும் ஜெய்ஸ்வால் சச்சின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடக்கத்தில் பொறுமையாக ஆடிய ஜெய்ஸ்வால் தற்போது வரை 17 பவுண்டரிகள் அடித்துள்ளார்.
சாய் சுதர்சன் 76 ரன்களுடனும் ஜெய்ஸ்வால் 118 ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.
இந்திய அணி மொத்தமாக 232/1 ரன்கள் குவித்துள்ளது. முதல் நாள் முடிய இன்னும் 28 ஓவர்கள் மீதமிருக்கும் நிலையில், இந்திய அணி 400 ரன்களை குவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெய்ஸ்வால் 3,000 சர்வதேச ரன்களை கடந்துள்ளார். அதில், டெஸ்ட்டில் மட்டுமே 75 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.