
டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணியை சல்மான் அகா கேப்டனாக வழிநடத்தி வருகிறார். அணியின் துணைக் கேப்டனாக ஷதாப் கான் செயல்படுகிறார்.
காயம் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு துணைக் கேப்டனான ஷதாப் கானுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் சில மாதங்களாக ஓய்வில் இருந்த ஷதாப் கான் மீண்டும் கிரிக்கெட் விளையாடவுள்ளார். காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட உள்ள நிலையில், டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக ஷதாப் கான் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
ஆல்ரவுண்டரான ஷதாப் கான் இதுவரை பாகிஸ்தான் அணிக்காக 70 ஒருநாள் மற்றும் 112 டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர். கடந்த ஜூனில் சொந்த மண்ணில் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் கடைசியாக அவர் விளையாடியிருந்தார். அதன் பின், தோள்பட்டை காயம் காரணமாக அவரால் விளையாட முடியவில்லை.
இந்த நிலையில், டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணிக்கான புதிய கேப்டனாக ஷதாப் கான் நியமிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டரான ஷதாப் கான் காயத்திலிருந்து குணமடைந்துவிட்டார். அவர் உள்ளூர் போட்டிகளில் விளையாடவுள்ளார். இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் பாகிஸ்தான் அணியுடன் இணைவார். டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வருகிற நவம்பர் 11 முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.