
ஆஸ்திரேலிய வீரர் சாம் கான்ஸ்டாஸ் ரேம்ப் ஷாட்டில் அடித்த சிக்ஸர் விடியோ வைரலாகி வருகிறது.
முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான கான்ஸ்டாஸ் இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்தார்.
பார்டர் - கவாஸ்கர் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீரர் ஜஸ்ப்ரீத் பும்ராவின் ஓவரில் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு இளைஞன் தனது முதல் போட்டியிலே சிக்ஸர் அடித்து புகழ்பெற்றார். அவர்தான் சாம் கான்ஸ்டாஸ்.
பும்ரா ஓவரில் ரேம்ப் ஷாட்டில் சாதாரணமாக சிக்ஸர் அடித்தார். அன்றுமுதல் அவருக்கென எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் இருக்கிறது.
சாம் கான்ஸ்டாஸ், ஷெஃபீல்டு ஷீல்டு தொடரில் நியூ சௌத் வேல்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.
இந்நிலையில், விக்டோரியா அணிக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான கான்ஸ்டாஸ் இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்தார்.
ஸ்காட் போலண்ட் ஓவரில் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழப்பார். இரண்டாம் இன்னிங்ஸில் அவரது ஓவரில் ரேம்ப் ஷாட்டில் சிக்ஸர் அடித்து அசத்துவார்.
பும்ராவை அடித்தது போலவே இந்த சிக்ஸரையும் அடித்திருப்பார். இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்தப் போட்டியில் கான்ஸ்டாஸ் அணி வெற்றிபெற 45 ரன்களும் விக்டோரியா அணி வெற்றிபெற 1 விக்கெட்டும் தேவை என பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.