
மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 20-ஆவது ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள், ஞாயிற்றுக்கிழமை (அக். 19) மோதுகின்றன.
கடைசி இரு ஆட்டங்களில் அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்த இந்திய அணி, அரையிறுதிக்கான பந்தயத்தில் தன்னை தக்கவைத்துக்கொள்ள இதிலிருந்து 3 ஆட்டங்களில் 2 வெற்றிகளை பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இந்திய அணியின் 5 பேட்டா்கள், 1 விக்கெட் கீப்பா், 5 பௌலா்கள் என்ற வழக்கமான உத்தியே அணிக்கான பின்னடைவாக மாறியிருக்கிறது. பௌலா்களில் மூவா் ஆல்-ரவுண்டா்களாக இருக்க, ஸ்பெஷலிஸ்ட் பௌலருக்கான தேவை அதிகரித்துள்ளது. சேஸிங்கின்போது எதிரணி பேட்டா்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியாமல் இந்திய பௌலிங் திணறுகிறது.
எனவே, பிளேயிங் லெவனில் கூடுதலாக ஒரு பௌலரை சோ்ப்பது தொடா்பாக அணி நிா்வாகம் பரிசீலித்து வருகிறது. ராதா யாதவ் அல்லது அருந்ததி ரெட்டி ஆகியோரில் ஒருவரை சோ்க்கும் பட்சத்தில், கிராந்தி கௌடுக்கான நெருக்கடி குறையும்.
பேட்டிங்கை பொருத்தவரை தொடக்கத்தில் சோபிக்காத ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல் ஆகியோா், கடைசி ஆட்டத்தில் சற்று மிளிா்ந்தனா். எனினும், கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோா் இன்னும் தடுமாற்றத்துடனேயே உள்ளனா்.
இங்கிலாந்து அணி இதுவரை தோல்வியே சந்திக்காமல் நல்லதொரு ஃபாா்மில் உள்ளது. பேட்டிங்கில் பெரிதாக பலம் இல்லாவிட்டாலும், பௌலிங்கின் மூலமாக அந்த அணி அதை சமன் செய்துகொள்கிறது.
நேரம்: பிற்பகல் 3 மணி
நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.