இந்தியா சொதப்பல்: ஆஸ்திரேலியா அபார வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான ஆஸி.யின் வெற்றி குறித்து...
Hazlewood wicket
ரோஹித் விக்கெட்டை வீழ்த்திய ஹேசில்வுட். படம்: ஐசிசி
Published on
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பெர்த் கிரிக்கெட் திடலில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. பந்துவீச்சைத் தேந்தெடுத்தது.

மழையின் காரணமாக போட்டி 26 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. இந்திய அணி 136/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 38 ரன்கள் எடுத்தார்.

டிஎல்எஸ் விதியின்படி 131 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆஸி. அணி 21.1 ஓவர்களில் 131/3 ரன்கள் எடுத்து வென்றது.

ஆஸி. கேப்டன் மிட்செல் மார்ஷ் 46 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியா சார்பில் அர்ஷ்தீப், வாஷிங்டன், அக்‌ஷர் படேல் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்கள். அடுத்த போட்டி அடிலெய்டில் அக்.23-இல் தொடங்குகிறது.

Summary

They won the first ODI against India by a huge margin of 7 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com