ஆஸி. வீராங்கனைக்குச் சடை பின்னிய இந்தியச் சிறுமி... வைரல் விடியோ!

ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லீஸ் பெர்ரிக்கு அலங்கரித்த இந்தியச் சிறுமி பற்றி...
An Indian girl braided a braid for an Australian player.
ஆஸி. வீராங்கனைக்குச் சடை பின்னிய இந்திய சிறுமி. படங்கள்: இன்ஸ்டா / ஆஸி. வுமன் கிரிக்கெட்.
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லீஸ் பெர்ரியின் தலைமுடியை அலங்கரித்த இந்திய சிறுமியின் விடியோ வைரலாகி வருகிறது.

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியா. இலங்கையில் நடைபெற்று வருகின்றன.

புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் இருக்கிறது. முதல் அணியாக அரையிறுதிக்கும் தகுதிபெற்றது.

ஆஸி. தனது அடுத்த போட்டியில் அக்.22ஆம் தேதியில் இங்கிலாந்து உடன் மோதுகிறது.

விசாகப்பட்டினத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஆஸி. வீராங்கனைகளுடன் இந்திய சிறுமிகள் பழகிவருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக எல்லீஸ் பெர்ரிக்கு சிறுமி ஒருத்தி கிராமிய பாணியிலான முடி அலங்காரத்தை செய்தார்.

சக வீராங்கனைகள் அழகாக இருப்பதாகக் கூறினார்கள். எல்லீஸ் பெர்ரி அந்தச் சிறுமியிடன், “தினமும் எனக்கு இப்படி செய்வாயா?” எனக் கேட்பார்.

அந்தச் சிறுமி, “நீங்கள் தினமும் என்னிடம் வந்தால் நான் செய்கிறேன்” என்பார்.

இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பாக, அலீஸா ஹீலி இந்தியச் சிறுமிக்கு அவர்களது நாட்டு வழக்கத்தைச் சொல்லித் தருவார்.

பாட் கம்மின்ஸ் உலகக் கோப்பையின் போது இந்தியா வந்திருந்த போதும் ஹைதராபாத் அரசு பள்ளி மாணவர்களைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

A video of an Indian girl decorating Australian player Alyssa Healy's hair is going viral.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com