
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி திணறி வருகிறது. ஆறு மாதங்களுக்குப் பின்னர் ஒருநாள் களத்துக்குத் திரும்பிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் ரோஹித் சர்மா 8 ரன்களிலும், விராட் கோலி ரன் ஏதுமின்றியும் வெளியேறியதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று பெர்த்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் ஆறு மாதங்களுக்குப் பின்னர் இந்திய நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் களமிறங்கியதால் ரசிகர்கள் ஆரவாரத்தில் இருந்தனர்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி, முதலில் பேட்டிங் ஆகிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 8 ரன்களில் வெளியேற, கேப்டன் ஷுப்மல் கில் 2 பவுண்டரிகளுடன் 10 ரன்களில் ஏமாற்றமளித்தார்.
அவருக்குப் பின்னர் வந்த விராட் கோலி 8 பந்துகளை எதிர்கொண்டு மிட்செல் ஸ்டார்க்கின் பந்து வீச்சில் கவர் டிரவ் அடிக்கப் போய் கூப்பர் கொனோலியிடம் கேட்சானார். இதனால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
8.1 ஓவர்களில் இந்திய அணி 25 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.
ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஆல்-ரவுண்டர் அக்ஷர் பட்டேல் இருவரும் நிதானமாக விளையாடி வருகின்றனர். இந்திய அணி 11.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்துள்ள நிலையில், மழை பெய்ததால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மிட்செல் ஸ்டார்க், நாதன் எல்லீஸ், ஹேசில்வுட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.