
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு 245 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகின்றது. இந்தூரில், இன்று (அக். 22) நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில், 9 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களை குவித்துள்ளது.
அதிகப்படியாக, இங்கிலாந்து அணிக்காக வீராங்கனைகள் டாமி பியூமாண்ட் 78 ரன்கள், ஆலிஸ் கேப்ஸி 38 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர்.
முன்னதாக, உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கியது முதல் ஒரு போட்டியில் கூட தோல்வியே சந்திக்காமல், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மகளிர் உலகக் கோப்பை: இங்கிலாந்துக்கு எதிராக ஆஸி. பந்துவீச்சு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.