

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசி ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மெக் லேனிங்கின் சாதனையை ஸ்மிருதி மந்தனா சமன் செய்துள்ளார்.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
நவி மும்பையில் நேற்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம், இந்திய அணி நான்காவது அணியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதீகா ராவல் அதிரடியாக விளையாடி சதங்கள் விளாசி அசத்தினர். ஸ்மிருதி மந்தனா 109 ரன்களும், பிரதீகா ராவல் 122 ரன்களும் எடுத்தனர்.
நேற்றையப் போட்டியில் சதம் விளாசியதன் மூலம், சர்வதேச போட்டிகளில் அதிக சதங்கள் விளாசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீராங்கனை மெக் லேனிங்கின் சாதனையை ஸ்மிருதி மந்தனா சமன் செய்துள்ளார். இருவரும் சர்வதேசப் போட்டிகளில் தலா 17 சதங்கள் விளாசியுள்ளனர்.
சர்வதேசப் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய வீராங்கனைகள்
மெக் லேனிங் - 17 சதங்கள்
ஸ்மிருதி மந்தனா - 17 சதங்கள்
சூஸி பேட்ஸ் - 14 சதங்கள்
டம்மி பீமௌண்ட் - 14 சதங்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.