

நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் பாகிஸ்தான் மகளிரணி தொடரை நிறைவு செய்துள்ளது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நான்கு அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
அரையிறுதி சுற்றுக்கான நான்கு அணிகளும் உறுதி செய்யப்பட்டுவிட்டாலும், இன்னும் சில லீக் போட்டிகள் மீதமிருக்கின்றன.
ஐசிசி உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டி மழை காரணமாக நீண்ட நேரம் தாமதமானது. பின்னர், டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் அணி விளையாடத் தொடங்கியது.
பாகிஸ்தான் அணி 4.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 18 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் மீண்டும் நிறுத்தப்பட்டது. நீண்ட நேரத்துக்கு மேலாக மழை நீடித்ததால், ஆட்டம் முடிவு எட்டப்படாமல் கைவிடப்பட்டது. இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் அனைத்து அணிகளும் குறைந்தது ஒரு போட்டியிலாவது வெற்றி பெற்றுள்ள நிலையில், பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில்கூட வெற்றி பெறாமல் தொடரை நிறைவு செய்தது.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி, 4 போட்டிகளில் தோல்வியடைந்தது. மூன்று போட்டிகளுக்கு முடிவு கிடைக்காதது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.