

உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் இந்தூரில் இன்று (அக்டோபர் 25) நடைபெற்று வரும் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்கா முதலில் பேட் செய்தது.
முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 24 ஓவர்களில் 97 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் கேப்டன் லாரா வோல்வர்ட் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, சினாலோ ஜாஃப்டா 29 ரன்களும், நடின் டி கிளர்க் 14 ரன்களும் எடுத்தனர். மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய அலானா கிங் 7 ஓவர்களில் வெறும் 18 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அவரைத் தொடர்ந்து, மேகன் ஷுட், கிம் கார்த் மற்றும் ஆஷ்லே கார்டனர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
98 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.
இதையும் படிக்க: சர்வதேச கிரிக்கெட்டில் 50-வது சதம் விளாசி ரோஹித் சர்மா சாதனை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.