
இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் விலகியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரும், ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள், டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ், இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து காயம் காரணமாக விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கு முன்னதாக அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணி வருகிற அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
அதைத்தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிராக அக்டோபர் 19 ஆம் தேதி தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடுகிறது.
இந்த நிலையில், இந்தத் தொடர்களில் கம்மின்ஸ் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 32 வயதான கம்மின்ஸ், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது மொத்தமாக 95 ஓவர்கள் பந்து வீசினார்.
இந்தத் தொடரில் முதுகு வலி காயத்தால் அவதியடைந்து வந்தார். இதனால், அவர் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அவர் 7 வாரங்கள் வரை ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். அதன்பின்னர், அவர் ஆஷஸ் தொடருக்கு முழு உடல் தகுதியை எட்டுவாரா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.