
இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டரான ஜேமி ஓவர்டன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான ‘ஆண்டர்சர் - டெண்டுல்கர் டிராபி’ சமீபத்தில் நடைபெற்றது. இந்தத் தொடரில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் ஜேமி ஓவர்டன் வெறும் இரண்டு போட்டிகளில் மட்டும் விளையாடியிருந்தார்.
இந்த நிலையில், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து காலவரையின்றி ஓய்வெடுக்கப் போவதாக ஜேமி ஓவர்டன் தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
31 வயதான ஜேமி ஓவர்டன் இங்கிலாந்து அணிக்கு மட்டுமின்றி, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும், தி ஹண்ட்ரட் தொடரில் லண்டன் ஸ்ட்பிரிட் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.
2022 ஆம் ஆண்டு அறிமுகமான ஜேமி ஓவர்டன் இங்கிலாந்து அணிக்காக இதுவரை 6 ஒருநாள் போட்டிகளிலும், 12 சர்வதேச டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
இதுகுறித்து ஜேமி ஓவர்டன் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “நீண்ட யோசனைக்குப் பின்னர் சிவப்பு பந்து வடிவமான டெஸ்ட் தொடரில் இருந்து காலவரையின்றி ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளேன்.
இங்கிலாந்துக்காக 2 டெஸ்ட் போட்டிகள் உள்பட 99 முதல்தரப் போட்டிகளில் விளையாடியதற்காக மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணருகிறேன்.
டெஸ்ட் போட்டிகளும், முதல்தரப் போட்டிகளும் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை அடித்தளமாக அமைந்தது. இதுவரை எனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளுக்கு துவக்கமாக இருந்தது.
எதுவாயினும், 12 மாத காலகட்டத்தில், உடல் ரீதியிலும், மன ரீதியிலாகவும் என்னை முழுமையாக கிரிக்கெட்டுக்கு அர்ப்பணிக்க முடியாது. மேலும், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.