இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர் விலகல்!

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர் டோனி டி ஸார்ஸி காயம் காரணமாக விலகியுள்ளார்.
tony de zorzi
டோனி டி ஸார்ஸிபடம் | AP
Published on
Updated on
1 min read

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர் டோனி டி ஸார்ஸி காயம் காரணமாக விலகியுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெற்று வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி லார்ட்ஸ் திடலில் இன்று (செப்டம்பர் 4) நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க வீரர் டோனி டி ஸார்ஸி காயம் காரணமாக விலகியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின்போது, ஜோஸ் பட்லர் அடித்த பந்தை எல்லைக்கோட்டில் தடுக்க முயன்றபோது டோனி டி ஸார்ஸிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதன் பின், அவர் உடனடியாக பெவிலியனுக்குத் திரும்பினார். அவர் மீண்டும் ஃபீல்டிங் செய்ய வரமாட்டார் என்பதும், தேவைப்பட்டால் மட்டுமே பேட்டிங் செய்ய வருவார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், அவர் தற்போது ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

காயம் காரணமாக விலகியுள்ள டோனி டி ஸார்ஸிக்கு பதிலாக தென்னாப்பிரிக்க அணியில் மாற்று வீரர் அறிவிக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

Summary

South African batsman Tony de Zarzi has been ruled out of the ODI series against England due to injury.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com